Sunday, August 17, 2025

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இணையவழியில் பயிர்க் கடன்

 



  • நாட்டிலேயே முதல்முறையாக இணையவழியில் தமிழகத்தில் விவசாயிக ளுக்கு பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • நாட்டிலேயே முதல்முறையாக ஒரு முக்கியமான திட்டத்தை வேளாண் மக்களுக்காக தொடங் கிவைத்துள்ளேன். விவசாயி கள் பயிர்க் கடன் பெறுவதற்காக, தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியா கச் சென்று விண்ணப்பித்து, கடனைப் பெற ஒருவாரம் வரை காத் திருக்கும் நடைமுறைதான் இப்போது உள்ளது
  • தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழா வில், ரூ. 512.52 கோடியில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 362.77 கோடியில் 1,073 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்தும், ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் தொடங்கி வைத்தார் 
  • விவசாயிகளின் நலன்கருதி கால தாமதத்தைத் தவிர்க்க, கூட்டுறவு வங்கிகளுக்கு அவர்கள் செல்லாமல், வீட்டில் இருந்தே இணைய வழியில் பயிர்க் கடனுக்கு விண் ணப்பிக்கும் நடைமுறையையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க் கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையையும் தருமபுரியில் தொடங்கி வைத்தார்.
  • மேலும் தர்மபுரியில் 2008-இல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி உருவாக்கிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் இருந்த போது நிறைவேற்றப்பட்டது. தற் போது 2-ஆவது கட்டமாக ரூ. 7,890 கோடியில் இத்திட்டப்பணி கள் நடைபெற்று வருகின்றன.


Previous Post
Next Post

0 Comments: