Sunday, August 24, 2025

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது கூட்டம்


மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு நியூயார்க் நகரில் நடை பெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அவர் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது ஆண்டு கூட்டம் செப்டம் பர் மாதம் தொடங்குகிறது. இதில் 23 முதல் 29-ஆம் தேதி வரை உயர் நிலை பொது விவாதம் நடைபெ றுகிறது. இதில் 23-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகிறார். அவர் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவி யேற்ற பிறகு ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் முதல்முறையாகப் பேச இருக்கிறார்.


இந்தியா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேச உள் ளிட்ட நாடுகளின் தலைவர்கள் செப்டம்பர் 28-ஆம் தேதி உரை யாற்றுவார்கள் என்று ஐ.நா. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று தெரிகிறது


இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments: